‘சர்கார்’-பேட்ட’ படங்கள் இடையே அமைந்த ஒற்றுமை
தளபதி விஜய் நடித்த ‘சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தை தயாரித்து வருகிறது.
பேட்ட திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதே கல்லூரியில்தான் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதூ.
‘பேட்ட’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும் இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ஆம் தேதியும் நடைபெறும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
Leave a Reply
You must be logged in to post a comment.