shadow

‘சர்கார் படத்தின் ரன்னிங் டைம்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடங்கள் ரன்னிங் அதாவது 2 மணி நேரம் 44 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது. இரண்டே முக்கால் மணி நேரம் கொண்ட நீளமான படமாக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் ரசிக்கும் வகையில் விறுவிறுப்பாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி 170 நிமிடங்கள் ரன்னிங் டைமையும், கத்தி 161 நிமிடங்கள் ரன்னிங் டைமையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply