‘சர்காரை’ அடுத்து ‘தர்பார்’. ரஜினி படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸின் டைட்டில்

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி நடிக்கும் 167வது படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு அவர் ‘தர்பார்’ என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.

தர்பார்’ படத்தின் டைட்டிலுடன் கூடிய அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை லைகா நிறுவனம் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது

Leave a Reply