shadow

சரித்திர படத்தில் நாயகியாகிறார் சன்னிலியோன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், தமிழில் உருவாகவுள்ள சரித்திர படம் ஒன்றின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம், ‘செளகார்பேட்டை’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய வடிவுடையான் என்ற இயக்குனர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சன்னிலியோன் நடிக்கவுள்ளார். சரித்திரத்தில் முக்கிய இடம்பெற்ற ஒரு ராணியின் கேரக்டரில் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்காக அவர் குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி ஆகிய பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply