shadow

சம்பளம் இன்றி வேலை செய்த ஊழியர்களுக்கு பீட்சா கொடுத்த ஜார்ஜ் புஷ்

அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்க செனட் சபையில் செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளதோடு அரசு ஊழியர்களுக்கு இன்னும் இம்மாதம் வரவேண்டிய சம்பளமும் வரவில்லை. மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், சம்பளம் இன்றி பணியாற்றி வரும் சேவை பணியாளர்களுக்கு ‘பீட்சா’ வாங்கி கொடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரே நேரில் சென்று ஒவ்வொருவருக்கும் ‘பீட்சா’ வை வழங்கினார்.

இது தொடர்பாக ஜார்ஜ் புஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘பீட்சா’ வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நமக்கு ஆதரவு அளிக்கும் நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply