சமூக வலைத்தளங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும்: மயில்சாமி அண்ணாதுரை

சமூக வலைத்தளங்களால் இளைஞர்களுக்கு பல்வேறு நன்மைகள் இருந்தாலும், குற்றம் அதிகமாக இவை முக்கிய காரணம் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அதே நேரத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்தி கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களை சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக ஊடகங்களை தகவல் தொடர்புகளுக்காக பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியால், இறுதியில் அது வாழ்க்கையை அழித்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்

Leave a Reply