shadow

சமூகவியலில் சிறந்த கல்விச்சேவை: பார்வையற்ற புதுச்சேரி பல்கலை பேராசிரியர் தஸ்தகீருக்கு சிறப்பு விருது

Guarantee gold seal

Guarantee gold seal

புதுச்சேரி: சமூகவியலில் சிறந்த கல்விச் சேவை புரிந்தமைக்காக சிறந்த பேராசிரியர் விருது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் தஸ்தகீருக்கு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் தஸ்தகீர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக சமூகவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கண் பார்வையற்ற பேராசிரியர் தஸ்தகீர் முதன்முறையாக பிஎச்டி ஆராய்ச்சி பாடப்பிரிவில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சிறந்த கல்விச் சேவையை பாராட்டி சிங்கப்பூரைச் சேர்ந்த வீனஸ் சர்வதேச கல்வி பவுண்டேஷன் அமைப்பு சார்பில் வழங்கி உள்ளது.

சென்னையில் கீரின்பார்க் ஓட்டலில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இச்சிறப்பு விருது நீதியரசர் வள்ளிநாயகம், சிங்கப்பூர் தேசிய பல்கலை பேராசிரியர் மனோஜ்குப்தா, ஆகியோர் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் தஸ்தகீருக்கு வழங்கி பாராட்டினர்.

இவர் ஏற்கெனவே கடந்த 2015-ல் பல்கலைக்கழக சிறந்த ஆசிரியர் விருது, 1995-ல் சிறந்த இளம் சமூக விஞ்ஞானி விருது, 1998-ல் சிறந்த இளைஞர் விருது, 2008, 2012-ல் சர்வதேச கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்.

தமிழக அரசு விருது
தனது சிறு வயதிலேயே மெனிங்கிட்டிஸ் நோய் பாதிப்பால் முழுமையாக பார்வையிழந்த இவர் பள்ளி, கல்லூரியில் சிறந்த கல்வித் தரத்துடன் தேர்ச்சி பெற்றார். பின்னர் பிரெய்லி முறையில் பாடத்திட்டங்களை அறிந்து மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

சிறந்த பார்வையற்ற ஆசிரியர் என்ற தமிழக அரசின் விருதை 2003, 2008 ஆண்டுகளில் தஸ்தகீர் பெற்றார். இந்திய சமுதாயத்தில் நிலவும் சமூக கட்டமைப்புகள், நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

ஆங்கிலத்தில் மட்டும் இல்லாது, ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் மெதுவாக பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பித்து வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாணவரையும், சிறந்த கல்வித்தரம், ஆராய்ச்சி திறன்களுடன் உருவாக்க பேராசிரியர் தஸ்தகீர் பாடுபட்டு வருகிறார்.

Leave a Reply