சமந்தாவின் அடுத்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார் அதிகாரிகள்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்னரும் வெற்றிப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை குறையாமல் காப்பாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் அவருக்கு பெரும் பெயரை பெற்று கொடுத்துள்ளது

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் சமந்தாவும் நாகசைதன்யாவும் இணைந்து நடித்த ‘மஜிலி’ என்ற தெலுங்கு திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஷிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா உள்பட பலர் நடித்துள்ளனர் கோபிசுந்தர் இசையமைத்த இந்த படத்திற்கு விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவும், பிரவீன் பூடி படத்தொகுப்பும் செய்துள்ளனர்,.

 

Leave a Reply