shadow

சந்தோஷ் ஜெயகுமாருடன் மீண்டும் இணைந்த கவுதம் கார்த்திக்! 3வது அடல்ட் காமெடி படமா?

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் இந்த படம் அடல்ட் காமெடி படம் இல்லை என்றும், இதுவொரு சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் படம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் இந்த படத்தில் ஹீரோயினே இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தீமைதான் வெல்லும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் முழுப்பகுதியில் கோவா பகுதியில் படமாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply