shadow

சட்டம் மற்றும் என்சிசி வீரர்களுக்கு ராணுவத்தில் பணி

armyஇந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் பணியளிக்கக்கூடிய ‘41-வது என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் – ஏப்ரல் 2017’ மற்றும் ‘18-வது ஜேக் என்ட்ரி ஸ்கீம்- ஏப்ரல் 2017’ என்ற பயிற்சி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70 பயிற்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘41-வது என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் – ஏப்ரல் 2017’ என்ற பிரிவுக்கு 55 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2017 தேதியின்படி 19 – 25க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியுடன் என்.சி.சி. வீரராக ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.08.2016

www.joinindianarmy.nic.in இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறையின்படி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் என்.சி.சி. அலுவலகம் வழியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இறுதியாக விண்ணப்பம் 22-8-2016-ந் தேதிக்குள் படைப்பிரிவு அதிகாரி அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

18-வது ஜேக் என்ட்ரி ஸ்கீம்- ஏப்ரல் 2017’ பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2017 தேதியின்படி 21 – 27க்குள் இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனிலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி 15.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply