shadow

சஞ்சய் ராமசாமியை அடுத்து மீண்டும் தொழிலதிபர் கேரக்டரில் சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி என்ற் தொழிலதிபர் வேடத்தில் நடித்த சூர்யா, தற்போது ஜி.ஆர்.கோபிநாத் என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சூர்யாவின் 38வது படமாக அமையவுள்ள இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கவுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோரூர் ராமசாமி கோபிநாத் என்ற ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து திரைப்படமாக இவர் இயக்கவுள்ளார். ஏர் டெக்கான் நிறுவனத்தை தொடங்கி குறைந்த கட்டணத்தில் நடுத்தர வர்க்கத்தினர்களும் விமானத்தில் செல்ல வழிவகுத்தவர்தான் இந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற தொழிலதிபர்

சூர்யா-சுதா இணையும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

 

Leave a Reply