சச்சின் எடுத்த அதிரடி முடிவு

சச்சின், விராட் கோலி உள்பட பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு பேட் செய்து கொடுக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்ததாகவும் அவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரிடம் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்ததாக செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அடுத்து சச்சின் மற்றும் விராட் கோலி அவருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த தகவலை தெரிந்த சோனு சூட் அவருடைய விலாசத்தையும் கண்டு பிடித்து உதவி செய்தார். இதனையறிந்த சச்சின் டெண்டுல்கரும் அதிரடியாக அவரிடம் தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்து தனது தரப்பிலும் நிதி உதவி அளிக்க முன்வந்தார்

தற்போது சோனு சூட் மற்றும் சச்சின் ஆகிய இருவரின் உதவியால் தற்போது உடல்நலம் தேறி வருகிறார் என்பதும் விரைவில் அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply