shadow

சசிகலா இறந்துவிட்டதாக தவறான டுவீட் போட்ட உலக பிரபலம்

ஆர்.கே ந்கர் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் சசிகலா தரப்பினர் இன்று ஜெயலலிதாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான்கான், சசிகலா இறந்துவிட்டதாக ஒரு தவறான டுவீட்டை போட்டு வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார்.

அவர் தனது டுவிட்டரில், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையும், அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டார் என்றும், அவருடைய வீட்டில் இருந்து கிலோ கணக்கில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், அதிக பணத்தை தவறான முறையில் சேர்ப்பவர்களின் கதி இதுதான் என்றும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

இம்ரான்கானின் இந்த டுவீட்டை இந்திய பத்திரிகையாளர் சாதிக் பட் என்பவர் இம்ரான்கானுக்கு சுட்டிக்காட்டவே தனது தவறை புரிந்து கொண்ட இம்ரான்கான் உடனே தனது டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் இந்த டுவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Leave a Reply