shadow

சக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்

பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் சக மாணவ, மாணவிகளை கொலை செய்து அவர்களின் ரத்தத்தை குடிக்க திட்டமிட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் உள்ள ஒரு புகழ் பெற்ர பள்ளியில் கல்வி பயின்று வரும் இரண்டு சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது.

அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர். அதற்காக கத்தியுடன் வந்த அவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

Leave a Reply