shadow

கோவிலில் கொடிமரம் இருப்பது ஏன் தெரியுமா?

முக்கிய கோவில்களில் தவறாமல் இடம் பெற்றிருப்பது கொடிமரம் என்பது ஆன்மீகவாதிகள் அனைவரும் அறிந்ததே. இந்த கொடிமரம் கோவிலில் ஏன் வைக்கப்படுகிறது என்பது தெரியுமா

கோவிலில் நடைபெறும் திருவிழாவின் போது பக்தர்களை மட்டுமின்றி தேவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே கொடிமரம் வைக்கப்பட்டு அதில் கொடியேற்றப்படுவதாக ஐதீகம்.

மேலும் கோவில் என்பது மனிதனின் உடல் போன்றது என்று பெரியவர்கள் கூறுவார்கள். கோயில் கருவறையை மனிதனின் தலை என்றும், மகா மண்டபம் மார்புப் பகுதி என்றும், மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல என்றும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பதுதான் கொடிமரம் என்றும் கூறப்படுவதுண்டு.

Leave a Reply