கோவா: கூட்டணி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளதால் பாஜகவுக்கு சிக்கல்

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயன்று தோல்வி அடைந்த பாஜகவுக்கு தற்போது கோவாவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு தற்போது கூட்டணி கட்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி, பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் இதனால் ஆளும் பாஜகவினர் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கோவா அமைச்சருமான விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம் கூறியபோது ‘‘கோவாவில் சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி எடுக்க வேண்டும். இல்லயென்றால் மாநில அரசில் இருந்து வெளியேறுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி மற்றும் மஹாராஷ்டிரவாதி கோமந்த்தக் கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

Leave a Reply