கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்றிரவு காலமானதை அடுத்து புதிய முதல்வரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் திடீரென அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது

கோவா சட்டப்பேரவைக்கு 40 தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தலும் பெரும்பான்மை இல்லை. ஆனால், 13 இடங்களைப் பெற்ற பாஜக, தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்ட் கட்சி, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது

இதுகுறித்து  கோவா மாநில காங்கிரஸ் தலைவர், சந்திரகாந்த் கவ்லேகர் கூறும்போது, கோவா முதலமைச்சர் மரணம் வருத்தமளிக்கிறது. இதையடுத்து தனிபெரும்பான்மையாக உள்ள தங்களது கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அழைத்தால் சட்டப்பேரவையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply