கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தாலும் இரண்டு விவசாயிகளுக்கு லாபம் கொடுத்த பிகில்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி ரூபாய் வசூல் செய்து தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் லாபம் கொடுத்ததாக ஒரு ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பினரோ தயாரிப்பாளர் தவிர இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்ததாகவும். கூறப்படுகிறது. ஆனால் உண்மையான வசூல் என்ன? உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிகில் படம் நஷ்டமோ? லாபமோ? அது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் வெற்றியால் 2 விவசாயிகளுக்கு லாபம் கிடைத்துள்ளது

தேனி மாவட்டத்திலுள்ள விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் வெற்றியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதற்காக ரூ.2 லட்சம் பணத்தையும் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள இரண்டு விவசாயிகள் தாங்கள் வங்கியில் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப் படுவதை கேள்விப்பட்டு, பிகில் வெற்றியை பேனர் மற்றும் போஸ்டர் அடித்து கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த விவசாயிகளின் கடனை அடைத்து, வங்கியிலிருந்து ஆவணங்களை பெற்று அந்த விவசாயிகளும் கொடுத்தனர்

இதனால் அந்த விவசாயிகள் நெகிழ்ச்சி அடைந்து விஜய் ரசிகர்களுக்கு நன்றி கூறினார். பிரமாண்டமாக பேனர் வைத்து போஸ்டர் அடித்து வெற்றியை கொண்டாடுவதை இந்த விவசாயிகளின் கண்ணில் தெரியும் மகிழ்ச்சியே எங்களது உண்மையான வெற்றி கொண்டாட்டம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

இதுபோன்று அனைத்து ரசிகர்களும் செய்தால் தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலையை முற்றிலும் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply