கோடிக்கணக்கில் நஷ்டமடையும் கபாலீஸ்வரர் கோவில்: அதிர்ச்சி தகவல்

சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வரவேண்டிய வாடகை மற்றும் லீஸ் தொகைகள் சரிவர வருவதில்லை என்பதால் ஒவ்வொரு மாதமும் அந்த கோவிலின் வருமானம் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலை கபாலீஸ்வர் கோவிலுக்கு மொத்தம் சுமார் 500 வகையான சொத்துக்கள் உள்ளன. இதில் இருந்து வருடத்திற்கு ரூ.8 கோடி அளவில் வாடகையாக மட்டும் வருமான வரவேண்டும். ஆனால் தற்போது இதில் 60% மட்டுமே வருமானம் வருவதாகவும், மற்ற வாடகைதாரர்கள் வாடக தர மறுப்பதால் கோவிலுக்கு வரவேண்டிய வருமானம் நஷ்டத்தில் இருப்பதாகவும் தெரிகிறது

மேலும் பல கடைக்காரர்கள் மார்க்கெட் விலைக்கு வாடகை தராமல் மிகவும் குறைந்த அளவே தந்து கொண்டிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒருசிலர் வாடகைக்கு வாங்கும் கடையை உள்வாடகைக்கு விடுவதாகவும், இதனை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வாடகை பாக்கியாக ரூ.26 கோடி இருப்பதாகவும், இதனை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply