பூஜை செய்த பாஜக எம்பி

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஆயிரக்கணக்கிலும், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கிலும், தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பொது மக்களை காப்பாற்ற ஒரு பக்கம் டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இந்த கொரோனாவை தடுக்க தடுப்பூசி கண்டுபிடித்து குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சி நடந்து வருகிறது

இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஆன்மீகத்தின் வழியில் கொரோனாவை விரட்ட பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்ட வருகின்றன. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் அங்குள்ள கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை செய்துள்ளார்

இந்த சிறப்பு பூஜையின் மூலம் கொரோனா வைரஸை தங்கள் மாநிலத்தில் இருந்தும் நாட்டில் இருந்தும் விரட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Leave a Reply