shadow

கொடுங்கையூர் சிறுமிகள் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மழை காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் நேற்று சகோதரிகளான இரண்டு சிறுமிகள் சென்னை கொடுங்கையூர் பகுதியில் அறுந்து கிடந்த மின் வயர்களை மிதித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்த உயிரிழப்பிற்கு மின் வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்பதை அறிந்த தமிழக அரசு உடனடியாக மூன்று பொறியாளர்கள் உள்பட எட்டு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில், ‘சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கொடுங்கையூர் மின்விபத்து போன்ற மின்சார விபத்துகள் மீண்டும் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது ‘கொடுங்கையூர் சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக 3 அதிகாரிகள் உட்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply