shadow

கைமாறுகிறதா டுவிட்டர் இணையதளம்?

twitter1சண்டை போடுவதற்கு சிறந்த இடமாக இருந்து கொண்டிருக்கும், ட்விட்டர் விற்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வருடங்களாகவே இந்த செய்தி உலா வந்தாலும், ட்விட்டர் தற்போது இருக்கும் நிலைமையில் இந்த வதந்தி உண்மையாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. வெள்ளிக்கிழமை இந்த செய்தி வெளியான உடன் இந்த பங்கு 20.5 சதவீதம் உயர்ந்து 22.46 டாலராக இருக்கிறது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக 69 டாலர் வரை உயர்ந்த பங்கு அதிலிருந்து சரிந்து வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,600 கோடி டாலராக இருக்கிறது.

என்ன காரணம்?

முக்கிய காரணம் வருமானம். சர்வதேச அளவில் டிஜிட்டல் விளம் பரத்தில் ட்விட்டரின் பங்கு 3 சத வீதத்துக்கு கீழ்தான் இருக்கிறது. கூகுள் 30 சதவீதமும், ஃபேஸ்புக் 12 சதவீத பங்கினையும் வைத்திருக்கிறது. மாதத்துக்கு 31.3 கோடி வாடிக்கையாளர்கள் (ஆனால் பேஸ்புக் மாதத்துக்கு 150 கோடி வாடிக்கையாளர்கள்) சராசரியாக பயன்படுத்துகின்றனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. புதிய வாடிக்கையாளர் வருகை குறைவாக இருந்தாலும், வருங் காலத்தில் கூட ட்விட்டர் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிதாக உயராது என கணிக்கப் பட்டிருக்கிறது.

நிர்வாக கோளாறும் இருக்கிறது. கடந்த வருடம் நிறுவனத்தின் நிறுவனர் ஜேக் டோர்சே மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகும் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியவில்லை. நிறுவனம் தொடங்கி 10 வருடங்களுக்கு பிறகும் இன்னும் லாபமீட்டவில்லை.

எந்த நிறுவனம்?

ட்விட்டர் நிறுவனம் பல டெக்னாலஜி நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவந்தாலும், கூகுள் மற்றும் சேல்ஸ்போர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் முக்கிய நிறுவனங்களாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்கும் நடவடிக்கையில் கோல்ட்மேன் சாக்ஸ் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் எந்த நிறுவனமும் இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்தை வெளியிடவில்லை. நிறுவனத்தை மொத்தமாக விற்பது அல்லது பகுதியாக விற்பது குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுவருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு புரபெஷனல்களுக்கான சமூக வலைதளமான லிங்கிடுஇன் நிறுவனத்தை வாங்குவதற்கு இந்த இரு நிறுவனங்களும் முயற்சித்தன. ஆனால் மைக்ரோசாப்ட் வாங்கி யது. அதனால் ட்விட்டரை வாங்க இரு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

ட்விட்டரில் பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும் அரசியல், கலாசாரம், மீடியா உள்ளிட்ட பிரிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் இதனைக் கைப்பற்ற நிறுவனங்கள் விரும்புகின்றன.

தவிர கூகுள் நிறுவனத்தின் ஆர்குட், கூகுள் பிளஸ் ஆகிய சமூக வலைதளங்கள் பெரிய வெற்றி அடையவில்லை என்பதால் ட்விட்டரை வாங்க கூகுள் முயற்சி எடுக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டரின் எதிர்காலம் யார் கையில்?

Leave a Reply