கைத்தறி நெசவாளர்களின் தலைவர் ஆகிறார் சமுத்திரக்கனி
பிரபல நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது கொளஞ்சி, ஏமாளி, ஆண் தேவதை, பேரன்பு, மதுர வீரன், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் ‘சங்கத்தலைவன்’. ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளில் வாழும் கைத்தறி நெசவாளர்களின் பிரச்சனையை அலசும் இந்த படத்தில் சமுத்திரக்கனி ‘கைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவர் கேரக்டரில் நடித்து வருகிறார்
ஓகே கண்மணி உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த தொலைக்காட்சி விஜே ரம்யா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். மணிமாறன் இயக்கும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.