shadow

கைகுலுக்குவதால் சுகாதார பாதிப்பு

2கைகுலுக்கும் பாரம்பரியப் பழக்கம், வியாதியை பரவச் செய்கிறது என அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கைகுலுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பொதுவாக, கைகுலுக் கல் அமைதியை தெரிவிக்கும் விதமாகவும், ஒருவரது திறந்த உள்ளங்கை அவரது நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் ஆரம்பமாகியுள்ளது. உள்ளங்கைகளைக் காட்டும் இந்த வழக்கம் மாறி தற்போது வழக்கத்தில் உள்ள கைகுலுக்கும் முறைக்கு முன்னேறியுள்ளது.

இது வாழ்த்துச் சொல்வது அல்லது புறப்படுவது, ஆறுதல் தருவது, மரியாதை, நட்பு, அமைதி, நல்ல விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துதல் அல்லது ஒப்பந்தம் ஆகியவற்றின் சர்வதேச அடையாளமாக மாறி விட்டது. தனிநபரின் முக்கியத்துவத்தைத் தாண்டி கைகுலுக்குதல் என்பது வணிக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சமீப காலங்களில் கைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. அவை நோய்த் தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், மருத்துவமனை மற்றும் பிற சுகாதார மையங்களில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு பரிந்துரைப்பதும், அதற்கான கொள்கைகள் வகுப்பதும் அவசியமாகிறது.

சுகாதார நலப் பணியாளர்கள் நோயாளிகளின் வழியே தங்களது கைகளில் நோய் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர். நோய் பரவலை குறைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், வழக்கமான நோயாளிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்புகளால் சுகாதார நலப் பணியாளர்களின் கைகள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கைகுலுக்குவதால் பொது இடத்தில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையாக தீங்கு ஏற்படுவதுடன், இருவருக்கு இடையேயான கைகுலுக்குதலால் ‘மெர்ஸ்’ போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. எனவே, கைகுலுக்குவதற்குப் பதிலாக புதிய வழி ஒன்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. நோயாளிகள் கைகுலுக்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கைகுலுக்க ஒருவர் முற்படும்போது மற்றவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் அவமரியாதை என கருதாமல், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை அங்கீகரிக்கும் ஒன்றாக அது இருக்கும். எனவே, கைகளை காற்றில் அசைப்பது மற்றும் குனிந்து வணங்குவது ஆகியவை இதற்கு மாற்றாக இருக்கும் என ஆய்வு முடிவு கூறுகிறது.

‘கைகுலுக்குதல்’ என்பது பரஸ்பர மரியாதை, அறிமுகப் பழக்கமாக உலகெங்கும் உள்ளது. ஆனால் கைகுலுக்குவதிலும் அபாயம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கைகுலுக்கும் பாரம்பரியப் பழக்கம், வியாதியை பரவச் செய்கிறது என அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply