கே.எல்.ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி! ஐதராபாத் தோல்வி

சண்டிகாரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிய உறுதி செய்தார்.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணியின் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்தார். 4வது பந்தில் ராகுல் ஒரு பவுண்டரியும் அடுத்த பந்தில் இரண்டு ரன்களும் எடுத்து ஆட்டத்தை முடித்தார். மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது

ஸ்கோர் விபரம்

ஐதராபாத் அணி: 150/4 20 ஓவர்கள்

வார்னர்: 70
விஜய்சங்கர்: 26
ஹூடா: 14

பஞ்சாப் அணி: 151/4 20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 71
அகர்வல்: 55
கெய்லே: 16

இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. தோனி மற்றும் ரஸல் நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply