shadow

கேரள வெள்ளம்: நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்ப ரயில்வே அனுமதி

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அம்மாநில மக்களுக்கு நாடெங்கிலும் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு உணவு, உடை மற்றும் மருந்து பொருட்கள் நிவாரண உதவியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளாவின் எந்த ஒரு ரயில் நிலையத்திற்கும் நிவாரண பொருட்களை அனுப்பினால் அதற்கு கட்டணம் இல்லை என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அதற்கு பின்னரும் நீடிக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கேரளாவில் தற்போது பெரும்பாலான சாலை போக்குவரத்து வெள்ளத்தினால் தடை பட்டுள்ளதால் நிவாரண பொருட்களை அனுப்புபவரகள் இந்த இலவச சலுகையை பயன்படுத்தி ரயிலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Leave a Reply