shadow

கேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் மத்திய, மாநில மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்

இந்த நிலையில் கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய கேரளாவுக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்ப தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கேரள மக்களின் குடிநீருக்காக தெற்கு இரயில்வே சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மூலம் செல்லும் இந்த குடிநீர் இன்று மாலைக்குள் கேரளாவுக்குள் சென்றுவிடும் என்பதால் கேரள மக்களின் குடிநீர் ஓரளவு தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா, ரயில், குடிநீர், வெள்ளம்,

Leave a Reply