shadow

கேரள சட்டசபையின் சிறப்புக்கூட்டம்: கவர்னருக்கு பரிந்துரை

கேரளாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. சுமார் 400 உயிர்களும், ரூ.30 ஆயிரம் கோடி பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புபேரவை கூட்டத்தில் நிவாரணப் பணிகள், மறுவாழ்வு, மறுகட்டமைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசிடம் போதுமான நிதியுதவு கேட்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply