shadow

கேரளா, கர்நாடகாவை அடுத்து ஆந்திராவிலும் வேலையை காண்பிக்க தொடங்கிய கனமழை

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்ததால் அம்மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த பேரிடரில் இருந்து அம்மாநில மக்கள் மிண்டு வர பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கர்நாடகாவின் பல இடங்களிலும் பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டதால் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் தற்போது கனமழை
பெய்து வருகிறது. ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப் பாலங்கள் மூழ்கியதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

Leave a Reply