shadow

கேரளாவில் மலையாளம் கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை : தமிழகத்தில் இந்த சட்டம் வருமா?

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

தாய்மொழி வழியில் மாணவன் பாடங்களை கற்கும் போது அதை நன்கு புரிந்துகொள்ளும் விதத்தில் இருப்பதோடு, தாய் மொழி வளரவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் தற்காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் முதல்பாடமாக இருக்க வேண்டிய தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகள் கற்றுத்தரப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் கேரளாவில், அதன் தாய் மொழியான மலையாளத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்க வேண்டும். அப்படி கற்பிக்கத் தவறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் நம் தமிழ் மொழி சிறப்புறும்.

Leave a Reply