shadow

கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய ஸ்மித்: தொடர் தோல்வி எதிரொலியா?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த நிலையில் டி-20 தொடர் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டி இன்று தல தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் திடீரென இந்ததொடரில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக விலகிவிட்டாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கேப்டன் ஸ்மித்திற்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Leave a Reply