shadow

குழந்தைகள் முன் பெற்றோர் செய்யக்கூடாதவை எவை எவை?

childபெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும்,

தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது. எனவே,

குழந்தைகள் முன்பு என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்…. 

நீங்கள் குழந்தைகள் முன்னே மற்றவரை அடிப்பது. இது, குழந்தைகளின் மனதினுள் வன்முறை எண்ணத்தை வளர்த்துவிடும். எனவே

இத்தகைய தவறை குழந்தைகள் முன்னால் செய்யாதீர்கள்.

குழந்தைகள் முன் அசிங்கமாக திட்டிக்கொள்ள வேண்டாம். இந்த செயல் குழந்தையின் மனதினுள் ஏதோ சாதாரண வார்த்தைகள்

பதிவது போல பதிய ஆரம்பித்துவிடும். வளர வளர குழந்தைகளும் அந்த வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். அவர்கள் பேசுவதை வைத்து மட்டுமே அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என அறிய

முடியும். இல்லையேல், அவர்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாய் உணர தொடங்கி, மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுவார்கள்.

குழந்தைகள் ஏதாவது கருத்து கூறும் போது, “பெரியமனுஷன் மாறி பேசாதே..” என்று ஒதுக்காமல் காதுக் கொடுத்து கேளுங்கள்.

அவர்கள் கூறும் கருத்து தவறாக இருந்தால், அது ஏன் தவறு, அதனால் பயன் ஏதுமில்லை என அவர்களுக்கு புரியும் வகையில்

எடுத்துக் கூறுங்கள்.

மற்றவர் மத்தியில் குறைக்கூற வேண்டாம் மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் குழந்தையை குறைக் கூறாதீர்கள். இது, அவர்களை

மனதளவில் பெரியதாய் பாதிக்கும். மற்றும், அவர்களுக்குள்ளே தங்களுக்கு திறமை ஏதும் இல்லை என்ற எண்ணம் அதிகரிக்க இது

பெரிய காரணமாகிவிடும்.

Leave a Reply