shadow

குழந்தைகளை ஈர்க்கும் 3டி புத்தகங்கள்!
book
சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென நிறைய ஸ்டால்கள் அமைப்பட்டுள்ளன. புத்தகங்கள் வாங்க வரும் பெரியவர்கள், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் எந்தெந்தப் புத்தகங்களை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்; வாங்குகிறார்கள்?

குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுத்து வடிவில் மட்டுமல்லாமல் 2டி, 3டி வடிவிலும் நிறைய வந்துள்ளன. 3டி படங்களை தியேட்டரில் பார்க்கும்போது பிரத்யேகமாகக் கொடுக்கப்படும் கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு பார்ப்போம் இல்லையா? அதேபோல 2டி, 3டி புத்தகங்களைப் பார்க்கவும் படிக்கவும் கண்ணாடியோடு விற்கிறார்கள். இந்தப் புத்தங்களில் உள்ள படங்கள் கண் முன்னே நிற்பது போல இருக்கும்.

இந்தப் புத்தகங்கள் உள்ள ஸ்டால்களில் குழந்தைகளின் கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. 2டி, 3டி புத்தகங்களைக் குழந்தைகள் ஆசையாக வாங்கவும் விரும்புகிறார்கள்.

பிறகு வார்த்தை விளையாட்டுகள் உள்ள புத்தகம், புதிர்கள் நிறைந்த புத்தகங்களும் குழந்தைகளை ஈர்க்கின்றன. குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்க நிறைய புத்தகங்கள் உள்ளன. பொதுவாக விளையாட்டுடன் கூடிய பொதுஅறிவு கொண்டப் புத்தகங்களைச் சிறுவர் சிறுமிகள் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.

தேவதைக் கதைகள், ஜங்கில் புக் கார்ட்டூன் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகின்றன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஏற்ற வரலாற்று புத்தகங்கள், அம்மா, அப்பா சிறுவர் சிறுமிகளா இருந்தபோது படித்து மகிழ்ந்த புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கித் தருகிறார்கள். ஒரே இடத்தில் எல்லாப் புத்தகங்களும் கிடைக்கும் புத்தகக் கண்காட்சியைத் தவறவிடலாமா குழந்தைகளே!.

Leave a Reply