shadow

குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது எங்கே தெரியுமா?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் அவர்கள் தங்கும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

வெற்றிவேல் தவிர மீதி 17 எம்.எல்.ஏக்களும் நெல்லை மாவட்டம் பழையகுற்றாலம் சாலையில் அமைந்துள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரிசார்ட் முன்னாள் அதிமுக அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குக் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் சம்மந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதியில் குடில்கள், குளிர்சாதன அறைகள், சூட் அறைகள் என 30 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, இன்று அல்லது நாளை வரும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply