குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்: அதிரடி முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி

குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 40 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டதில் தற்போது அவர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply