வைரலாகும் புகைப்படம்

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் தற்போது நடித்துக் கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்

பாலிவுட்டில் லக்ஷ்மிபாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்காக இவரது சம்பளம் 50 கோடிக்கும் மேல் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில்தான் ஆரம்ப காலத்தில் குரூப் டான்ஸராக இருந்ததாகவும் அதன் பின்னர் கடின உழைப்பினால் தான் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பெற்று விட்டதாகவும் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

மேலும் உழைப்பாளி படப்பிடிப்பின்போது ரஜினியுடன் குரூப் டான்சராக பணிபுரிவதாகவும் அந்த படத்தில் பணிபுரிந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply