shadow

குஜராத் தேர்தல்: பாஜக எதிராக போட்டியிட சிவசேனா முடிவு

கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்த கருத்துவேறுபாடு குஜராத் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.

குஜராத் சட்டசபைத் தோ்தல் வருகிற டிசம்பா் மாதம் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வரும் நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக களமிறங்குவதாக சிவசேனாஅறிவித்து உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவு அளிக்கவிருப்பதாகவும் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது

Leave a Reply