shadow

குஜராத் தேர்தல் களம் குறித்து கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருந்தாலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஆதரவு இல்லை என்பதால் அக்கட்சி இந்த தேர்தலில் தோல்வி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 29 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அக்கட்சிக்கு 41 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு கடந்த ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பின்படி 59 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் சுமார் 80 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்கமுடியாத நிலை இருந்தாலும் பிரதமரின் சொந்த மாநிலம் என்ற செல்வாக்கு காரணமாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

Leave a Reply