shadow

குக்கர் சின்ன வழக்கால் இரட்டை இலைக்கு வந்த சிக்கல்?

தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு பதிவு செய்யப்பட்ட வழக்கில் `பதிவு செய்யாத ஒரு கட்சிக்குப் பொதுப் பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை வழங்குவது சாத்தியமில்லை” என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கமளித்தது

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், ‘டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை நான்கு வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். காலதாமதம் ஆகும்பட்சத்தில், டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து இரண்டு வார காலத்துக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது

எனவே இந்த உத்தரவின் அடிப்படையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காது என்பதை உறுதியாக கூற முடியாது. மேலும் நான்கு வாரத்துக்குள் இரட்டை இலை தொடர்பான வழக்கை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், அ.தி.மு.க. தரப்பிற்கு கிலி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இரட்டை இலை வழக்கை அ.தி.மு.க தரப்பு தாமதப்படுத்தினால் தினகரனுக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதே தற்போதைய நிலை

Leave a Reply