shadow

கிரிக்கெட் படத்தில் நடிகர் ஜீவா

உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியா வென்றதை மையமாக வைத்து உருவாகி வரும் பாலிவுட் படம் ஒன்றில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளாராம்.

‘83’ என்ற தலைப்பில் இந்தியில் தயாராகி வரும் இந்தப் படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் நடிக்கவுள்ள நிலையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கவுள்ளராம்.

முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தற்போது இந்த கேரக்டரில் ஜீவா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply