கிராமம் முழுவதும் சோலார் அடுப்புகள்: இந்தியாவின் முதல் கிராமம்

விறகு அடுப்பு, கேஸ் அடுப்பு இல்லாமல் ஒரு கிராமம் முழுவதும் சோலார் அடுப்பை பயன்படுத்தி வரும் அதிசய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெடுல் மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் உள்ள 75 வீடுகளிலும் விறகு அடுப்போ, மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் அடுப்போ இல்லை. இங்குள்ள குடிசை வீடுகள் உள்பட அனைத்து வீடுகளிலும் சோலார் அடுப்புகள் தான் உள்ளது.

சூரிய சக்தியின் பயனை இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் உணர்ந்திருப்பது மற்ற கிராமத்தினர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்தியாவில் சோலார் அடுப்பை பயன்படுத்தும் முதல் கிராமம் என்ற பெருமையை இந்த கிராமம் பெறுகிறது. இதேபோல் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் செயல்பட்டால் கேஸ் என்பதே தேவையின்றி போகும்

Leave a Reply