shadow

கின்னஸ் சாதனை பெற்ற உலகின் மிக அதிக வயதான நபர் காலமானார்

உலகிலேயே அதிக வயதான நபர் காலமானார்! அவருக்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றத்.

உலகின் வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த 113 வயதான மசாசோ நோனகா என்ற நபர் காலமானார்.

1905 ஆம் ஆண்டு பிறந்த ஜப்பானை சேர்ந்த மசாசோ நோனகா இளவயதில் உணவு விடுதி நடத்தி வந்தார். ஓய்வுக்குப் பின் தொலைக்காட்சியில் மல்யுத்தப் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததாகவும், இனிப்புகளை விரும்பி உண்டதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக அளவில் வயதான நபர்கள் அதிகம் பேர் வாழும் நாடாக ஜப்பான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply