shadow

கார்பன் பாஸ்டர் கட்டுமானக் கல்

கட்டுமானக் கல்லாகக் காலம் காலமாகச் செங்கல் பயன்பட்டு வருகிறது. ஆனால் இன்றைக்குள்ள கட்டுமானத் தேவையைக் கணக்கில் கொண்டு பார்த்தால் செங்கல் தயாரிப்பது சாத்தியமல்ல; மேலும் சுற்றுச்சூழலுக்கும் கேடு. அதனால் செங்கல்லுக்கு மாற்றாகப் பல புதிய கட்டுமானக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கார்பன் பஸ்டர்.

தொழிற்சாலைகளில் பழைய குப்பைகளை அப்படி எரித்தபின் கரியாகும் குப்பையைக் கொண்டு இந்த கார்பன் பஸ்டரைத் தயாரிக்கிறார்கள். கார்பன் பஸ்டர் இது கார்பன் டை ஆக்ஸைடை (கரியமில வாயு) உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுக்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமானப் பொருளாக இது சொல்லப்படுகிறது.

சுமார் ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர், 14 கிலோ அளவுக்கான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளும். இந்தக் கல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது இங்கிலாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் ஏராளமான பொருட்கள் எரிக்கப்படு. சாம்பலாக கழிவுகள் அதிகளவில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் கழிவுகளுடன் தண்ணீரைக் கலந்து, புது வகையான கட்டுமானப் பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கார்பன் பஸ்டர் கட்டுமானப் பொருளை செங்கல்லாகவும், ஜல்லிக் கற்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

கார்பன் பஸ்டரைத் தயாரிக்க அனல் மின் நிலைய கழிவுகள் மட்டுமின்றி மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்களைக் கொண்டும் தயாரிக்க முடியும். இதுபோன்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு வாயும் குறைந்த அளவே வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் ஏற்ற கட்டுமானப் பொருளாக கார்பன் பஸ்டர் பார்க்கப்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் குறைவாக வெளியிடும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே கட்டினால் சுற்றுச்சுழல் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply