காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு: 200 ரூபாய் டுவிட்டர் பயனாளிகள் காப்பாற்றுவார்களா?

கோவை சிறுமுகை சேர்ந்த காரப்பன் என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் சமீபத்தில் அத்திவரதர் மட்டும் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அவருக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பாஜக பிரமுகர் எச் ராஜா அவர்களும் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்

எச்.ராஜா இந்த விஷயத்தில் தலையிட்டதால் உடனே கொதித்தெழுந்த டிவிட்டர் பயனாளிகள் காரப்பனுக்கு திடீரென ஆதரவு தெரிவித்தனர்

அவரது கடையில் தான் பொருட்களை வாங்கப் போவதாக அறிவித்து இதுகுறித்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் கோவை போலீசார் காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து அமைப்பு ஒன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அவர் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்த 200 ரூபாய் டிவிட்டர் பயனாளிகள் வருவார்களா? என்ற கேள்வி நெட்டிசன்கள் எழுதியுள்ளனர்

Leave a Reply