shadow

காப்பீடு, மியூச்சுவல் பண்ட்களை விற்க இந்திய தபால் துறை பேமென்ட் வங்கி திட்டம்

இந்திய தபால் துறை பேமென்ட் வங்கி அடுத்தாண்டு முதல் காப் பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை விற்க திட்டமிட்டி ருக்கிறது.

இதற்காக எந்த நிறுவனத் துடனும் ஒப்பந்தம் போடவில்லை. ஆனால் 100-க்கும் மேற்பட்ட உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவ னங்கள் எங்களுடன் இணைவ தற்கு தயாராக இருப்பதாக இந்திய தபால் துறை பேமென்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் பேமென்ட் வங்கி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இந்தி யாவின் ஒவ்வொரு மாவட்டத் திலும் எங்களுடைய வங்கி செயல்படத் தொடங்கும்.

அடுத்த ஆண்டு முதல் மற்ற நிறுவனங்களின் நிதி திட்டங்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் எளிமையான, மக்களுக்கு புரியும் திட்டங்களை மட்டுமே விற்க முடிவு செய்திருக்கிறோம். ஐடிபிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி, ஆக்ஸிஸ் வங்கி, டாய்ஷ் வங்கி, பார்கிளேஸ் வங்கி, சிட்டி வங்கி, எஸ்பிஐ மற்றும் எல்ஐசி உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவர்களுடைய நிதி திட்டங்களை எங்கள் மூலமாக விற்பதற்கு விருப்பம் தெரிவித் திருக்கின்றனர். தவிர பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் எங்களை அணுகி இருக் கின்றன.

இதனால் எந்த நிறுவனங் களுடனும் பிரத்யேக ஒப்பந்தம் போடும் திட்டமில்லை. தபால் துறையை குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது.

நாங்கள் வாடிக்கையாளர் களிடம் எந்த திட்டத்தையும் பரிந் துரைக்க போவதில்லை. ஒவ் வொரு திட்டங்கள் குறித்தும் வெளிப்படையான அறிவிப்பு மட்டுமே இருக்கும் என ஏ.பி. சிங் தெரிவித்தார்.

Leave a Reply