காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நிறைமாத கர்ப்பிணி!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் தான் நிறைமாத கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இவர் தான் நிறைமாத கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

கர்ப்பமாக இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடவேண்டாம் என அவரது நண்பர்கள் அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply