‘காஞ்சனா 3’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி!
ராகவா லாரன்ஸ், ஓவியா நடித்த ‘காஞ்சனா 3’ வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது
இந்த படம் ஏப்ரல் 18க்கு பதிலாக ஒரு வாரம் முன்னரே அதாவது ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.