shadow

காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்று அறிவிப்பு! சென்னை வருகிறார் முகுல் வாஸ்னிக்

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வரவிருப்பதாகவும், சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள்து. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று மாலையில் தெரிந்து விடும்

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்ட தகவல் நேற்று வெளியான நிலையில் திமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தை சுறுசுறுப்பானது. நேற்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை ராகுல்-கனிமொழி இடையே நடந்தது. அப்போது இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் இன்று சென்னை அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனர்

Leave a Reply