காங்கிரஸ் கட்சியில் இணையும் ‘லிங்கா’ பட நடிகையின் தந்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் சோனாக்சி சின்ஹா. இவருடைய தந்தை சத்ருஹன் சின்ஹா, பாஜக பிரமுகராகவும், வாஜ்பாய் காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்

இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவரான சத்ருஹன் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளார். பீகாரில் பாட்னா சாஹிப் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக இருக்கும் இவர் இன்று திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக சத்ருஹன் தெரிவித்தார். இவர் வரும் மக்களவை தொகுதியில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply