shadow

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து சற்று முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நான்குமணி நேரமாக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை நடந்து வருகிறது

இருப்பினும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருவதாகவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன